Tamil Fonts
 
 
 
 
 
 
ஆலோசனை சேவைகள்
 
ஆலோசனை சேவைகள் என்பது மூலதன மற்றும் மீண்டுவரும் செயற்பாடுகளைக் கொண்ட தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சட்டத் துணையுடனான நிபுணத்துவத்துடன் கூடிய ஒரு கூட்டிணைப்பாகும். இரு தசாப்தங்களுக்கும் மேலான ஆலோசனை சேவையின் அனுபவங்களைக் கொண்டு எண்ணற்ற வாடிக்கையாளர்களுக்கு பரவலான மூலோபாய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசதுறை, வங்கிகள், வர்த்தக மற்றும் சேவைகள் துறையில் கூட பரந்த அளவிலான திட்டங்களின் ஒப்பந்த படிவங்கள் , அளவீட்டு முறைகள் , கூற்றுக்கள் , உரிமை சர்ச்சைகள் என்பவற்றில் காட்டப்பட்ட எமது பரிச்சயத்தை கருத்திற் கொள்ளும் போது வேறு எவ்விதமான வழிகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியாத ஆலோசனைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிந்துள்ளது. அவைகளாவன.
 
அ. பராமரிப்பு மற்றும் நிர்மாணிப்பு போன்ற சிறப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு கொள்முதல் உத்திகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கல்.
ஆ. CIDA நிறுவனத்தின் விண்ணப்பப்படிவங்களில் தரநிலை கேள்வி மனு ஆவணங்களின் பயன்பாடு பற்றியும் அளவீடு மற்றும் பல்வேறு பிற வெளியீடுகளின் தரநிலை முறைகள் தொடர்பாகவும் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கல்.
இ. ஒப்பந்த நிர்வாகம் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு நிபுணத்துவ கருத்துக்களை வழங்குதல். ஈ. வர்த்தக , ஒப்பந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் பொது மக்களின் கோரிக்கைகள், கட்டிடம் மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களில் எழும் பிரச்சினைகள் பற்றியும் அறிவுரை வழங்கல்.
ஈ. வர்த்தக , ஒப்பந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் பொது மக்களின் கோரிக்கைகள், கட்டிடம் மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களில் எழும் பிரச்சினைகள் பற்றியும் அறிவுரை வழங்கல்.
உ. ஒரு குறிப்பிட்ட நிர்மாணிப்பு ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களில் ஏற்படக்கூடிய தகராறுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குவதில் மதிப்பீட்டாளராகவும் வசதியளிப்பவராகவும் செயற்படல்.
ஊ. நிர்மாணத்துறையில் மத்தியஸ்த சேவைகளை வழங்கல்.
எ. சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாக தீர்ப்பளிக்கின்ற CIDA தீர்ப்பாளர் குழாத்தினதும் பரிந்துரைக்கப்பட்ட தீர்ப்பாளர்களினதும் நிருவாகியாக செயற்படல்.
ஏ. CIDA விண்ணப்பப்படிவங்களின் விலை ஏற்ற இறக்கங்களில் காணப்படும் சூத்திர முறை பயன்பாடு தொடர்பான அறிவு மற்றும் தொழில் பயிற்சி குறித்து அறிவுரை வழங்கல்.
ஐ. குறிப்பிடத்தக்களவு பாரிய செலவுகள் கொண்ட நிர்மாணப் பொருட்களினதும், தொழிலாளர்கள் மற்றும் ஆலைகளினதும் நிர்மாணத்துறை சார் புள்ளிவிபரங்களின் விலை குறியீடுகள் தொடர்பான தகவல்களை பிரசுரித்தல்.
ஒ. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய அளவிலான திட்டங்களுக்கு கருத்திட்ட முகாமை, மற்றும் ஆலோசனை தொடர்பான சேவைகளையும் கருத்திட்ட மீட்பு சேவைகளையும் வழங்குதல்.
ஓ. தொழில்நுட்ப கணக்காய்வுகளையும் மதிப்பீடுகளையும் மேற்கொள்ளலும் ஒப்பந்தம் முடிவுறுத்தப்படும் போது பறிமுதல் செய்தலும்.
ஔ. பயிற்சி நிர்வாக சபை மற்றும் நிர்மாணத்துறையில் இருக்கின்ற பிற முகவர்கள் , பயிற்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி வழங்குநர்கள் ஆகியோரை இணைத்து தொடர்ந்தேர்ச்சியான தொழில்முறை அபிவிருத்தி அமர்வுகளையும் தொழில் கருத்தரங்குகளையும் நடாத்துதல்.
மேலதிக விபரங்களை பணிப்பாளர் (ஆலோசனை சேவைகள்) தொலைபேசி இலக்கத்துக்கு 011-2688143 தொடர்புகொண்டு அல்லது இல 123 , சவ்சிரிபாயா , விஜேராம மாவத்தை , கொழும்பு 07 இல் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தின் ஆலோசனை சேவைகள் பிரிவுக்கு வருகைத்தந்து பெற்றுக்கொள்ள முடியும்.
 
 
CIDA நிறுவனத்தின் மத்தியஸ்தர்கள் குழாம்.
 
நிர்மாணத்துறை ஒப்பந்தங்களின் கீழ் வழக்குத்தீர்ப்பு வழங்கப்படும் போது முதன்மை நோக்கம் கொண்டு எழும் நிர்மாணத்துறை சார்ந்த சர்ச்சைகளை தீர்ப்பதற்கு கூடிய விரைவில் தீர்மானம் எடுக்கும் முறையொன்றும் தனிப்பட்ட பிரச்சினைகளில் நேரடியாக ஈடுபட்டு தீர்மானம் எடுக்கும் நடைமுறயொன்றும் உள்ளது . சாராம்சத்தில் , வழக்குத்தீர்ப்பு ஒரு நடுநிலையான மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் மூலம் வழங்கப்படும் வரை அல்லது வழக்கில் திருத்தம் கொண்டுவரப்படும் வரையில் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களுக்கு மத்தியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும் ஒரு தீர்ப்பாளரின் தீர்மானத்திலுள்ள இணக்கப்பட்டின் விளைவு SBD ஆவணங்களில் தெளிவாக உள்ளது.
 
CIDA நிறுவனம் நிர்மாணத்துறை சார் தீர்ப்புக்கள் வழங்குவதற்கான தீர்ப்பாளராக செயற்படுகின்றது.
 
திரு ஜயந்த பெரேரா
டாக்டர் எட்டி டி. சில்வா
திரு யு.ஜி. மல்லவாராச்சி
திரு ஏ.சி. இராசையா
திரு ஏ. ரணசிங்க
திரு சி. விஜேரத்தின
திரு டி. பி. ஜே. ரணதுங்க
திரு டி. எம். எப். பராக்கிரம
திரு டி.ஆர். என். பெர்டினாண்டோ
திரு ஜி. எச். லோரன்ஸ்
திரு எச். டி. சந்திரசேன
திரு எச். பீரிஸ்
திரு கே.பி.டபிள்யு. இராஜசிரி
திரு எல்.டபிள்யு.  ஜிரசிங்க
திரு எம். ஏ. டபிள்யூ. ஆர்.பெர்னாண்டோ
திரு எம். ஜே. ஷியாமல்
திரு பி. எம். குணசேகர
திரு ஆர். ஏ.பி ரோஹன
திரு எஸ். ஏ. ஜி. சூரியாராச்சி
திரு எஸ். பி. விஜேகோன்
திரு எஸ். மேஹாந்தன்
திரு எஸ். ருத்திரலிங்கம்
திரு டி. கொலன்னே
திரு டி. பி. ரணவீர
திருமதி பி. கீரவெல்ல
செல்வி. வி. நல்லதம்பி
பேராசிரியர். சி .வெடிக்கார 
 
 
பட்டியல்படுத்தப்பட்ட தீர்ப்பாளர்கள் அவ்வப்போது நடைமுறையிலுள்ள தீர்ப்பாளர் கோவை யின் கொள்கைக்கு இணங்க செயற்படுதல் வேண்டும். ​
 
 
 
 
 
 
  Construction Industry Development Act No - 33 of 2014  
 
© CIDA 2009. All Rights Reserved. Solution by Sri Lanka Telecom (Services) Ltd.