Tamil Fonts
 
 
 
 
 
 
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் CIDA நிர்மாணத்துறை சிறப்பு விருதுகள் (கட்டிட செயற்திட்டங்கள்) – விண்ணப்பிக்கும்முறை
 
பத்திரிகை மூலம் ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஒப்பந்ததாரர்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் கருத்திட்டத்தை விவரிக்கும் ஒரு விரிவான அறிக்கையையும் இணைத்து பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் அவரது விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
 
 
நிர்மாணத்துறை சார்ந்த சிறப்பு விருதுக்கு புள்ளிகள் வழங்கும் போது கருத்தில் கொள்ளப்படும் முக்கிய விடயங்கள்
 
 
  தலைமை அலுவலக அமைப்பு
 
பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் எடுத்துக்கொள்ளப்பட் தனிப்பட்ட கரிசனை.
பதிவுகளை முறையாகப் பேணுதலும் தளத்தில் இருந்து அறிக்கைகளைப் பெறுதலும்.
  நடைமுறைப்படுத்தல்
 
முன் திட்டமிடல் நடவடிக்கை.
பாதுகாப்பு, நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்.
மூலப்பொருட்கள் மற்றும் பொருட்கள் கொள்முதல் முறைகள் பதிவுகள், முன்னேற்ற வரவுப் பதிவுகள், பரிசோதனை அறிக்கைகள் முன் அறிவிப்பு அட்டவணை, ஆய்வுகூட பரிசோதனைகள்.
தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்.
  இறுதித் தயாரிப்பு
 
வேலை முடிவில் காட்டப்பட்ட கரிசனை.
தரமான பதிவுகளில் உள்ள சிறந்த அறிவு.
மேற்பார்வை மற்றும் சிறந்த தொழிலாளரின் சான்றுகள்.
தொழிலாளரின் தரத்திலுள்ள நிலைபேர்தன்மை.
முடிக்கப்பட்ட உற்பத்தியில் உள்ள நேர்த்தி.
சரியான நேரத்தில் முடிக்கும் திறன்.
  ஏனைய விடயங்கள்
 
உள்நாட்டு நிர்மாணத்துறையில் புதிய மற்றும் பொருத்தமான தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்தல்.
கருத்திட்டத்தின் சிக்கல் தன்மை.
   
 
சிவில் பொறியியல் கருத்திட்டங்களுக்கான “CIDA நிர்மாணத்துறை விருது” புள்ளிகள் வழங்கும் போது கருத்திற்கொள்ளப்படும் முக்கிய விடயங்கள்
தலைமை அலுவலகம் மற்றும் தள அமைப்பு.
கருத்திட்டத்தின் விவரம்.
கருத்திட்ட நிதிக் கட்டமைப்பு, திட்டமிடல், கருத்திட்ட கட்டுப்பாடு போன்றவற்றின் செயற்பாட்டு முறைகள்.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, சந்தை ஆய்வுகள் முதலியன.
 
 
"புத்தாக்க தொழில்நுட்பம் / நிர்மாணத்துறையில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உத்திகளுக்கான CIDA விருதுகள்" புள்ளிகள் வழங்கும் போது கருத்திற்கொள்ளப்படும் முக்கிய விடயங்கள்.
பிரச்சினையை அடையாளம் காணுதல்.
பிரச்சினை பகுப்பாய்வு.
விருப்ப அணுகுமுறைகள் .
நேரம் சேமிப்பு ,செலவு , தர மேம்பாடு போன்றவற்றில் புத்தாக்க தீர்வுகளைக் கொண்ட முறைமையொன்றை அடையாளம் காணுதல்.
தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் போது ஒழுங்குபடுத்தப்பட்ட வளங்களையும் வழிகாட்டல்களையும் பின்பற்றுதல்.
 
 
 
 
 
  Construction Industry Development Act No - 33 of 2014  
 
© CIDA 2009. All Rights Reserved. Solution by Sri Lanka Telecom (Services) Ltd.