Tamil Fonts
 
 
 
 
 
 
நிர்மாணப் பணிகளுக்கு வாடகைக்கு விடுதல்
 
வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு பெறமுடியுமான அதிகமான நிர்மாண இயந்திரங்கள் CIDA நிறுவனத்தின் இயக்குனர் பயிற்சி மையத்தில் (கல்கமுவ மற்றும் அநுராதபுரத்தில்) காணப்படுகின்றன. வாடகைக்கு பெறமுடியுமான சில இயந்திரங்கள் பின்வருமாறு ; சுமை ஏற்றிகள், பக்கோ ஏற்றிகள், தோண்டிகள், மோட்டார் கிரேடர்கள், மண்வாரிகள், டோசர்கள், இயந்திரங்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள், நடமாடும் பாரம் தூக்கிகள், குவி வண்டிகள், பாதை கொம்பக்டர்கள், காற்றமுக்கிகள், கொங்கிரீட் கலவை இயந்திரங்கள், தண்ணீர் பவுசர்கள், எரிபொருள் பவுசர்கள், சிறிய மின் உற்பத்தி இயந்திரங்கள், தண்ணீர் குழாய்கள், காற்றால் இயக்கப்படும் இரமர்கள் போன்றவைகள்.
 
பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்புக்காக ஆலோசனை பெறுதல்
 
நிர்மாண இயந்திரங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகிய விடயங்களில் இயக்குனர் பயிற்சி மைய ஊழியர்கள் (OTC) – கல்கமுவ மற்றும் நிர்மாணக் கருவிகள் பராமரிப்புப் பயிற்சி மையம் (CETRAC) – பத்தரமுல்லையில் இருப்பவர்கள் சிறந்த அனுபவமுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களது சேவைகள் பெரும்பாலும் தொழிற் துறை சார்ந்ததாக முன்னெடுக்கப்படுகின்றன. ஹைட்ராலிக், நியூமேடிக், எந்திர மின்னணுவியல் போன்றவை சம்பந்தமான பழுதுபார்த்தல்கள் விஷேடமாக முன்னெடுக்கப்படுகின்றன. CETRAC வேலைத்தளங்கள் நவீன உபகரணங்களைக் கொண்டதாகவும் நிர்மாணக் கருவிப் பொறியியலில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. நிர்மாண உபகரணப் பழுதுபார்த்தலை OTC யும் மேற்கொள்கின்றது.
 
தொழிற் துறை மூலம் செயற்பாட்டுப் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடியான பராமரிப்புகளை வழிப்படுத்த எங்களது சேவைகள் முயன்றுவருகின்றன.
 
 
தகவல்களுக்கு தொடர்புகொள்க:
 
வாடகைக்கு விடுதல்
உதவிப் பணிப்பாளர் (இயக்குனர் பயிற்சி மையம்)
கல்குலம
தொலைபேசி :025 - 2050520, 025 – 2050521
தொலை நகல்: 025 – 2050522
மின்னஞ்சல்: ictadotc@sltnet.lk
 
பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்புக்காக ஆலோசனை பெறுதல்.
முகாமையாளர் (CETRAC)
பத்தரமுல்ல
தொலைபேசி: 011 - 2784412, 011 – 2784413
தொலை நகல்: 011 – 2784411
மின்னஞ்சல்: cetrac@sltnet.lk
 
 
 
 
 
 
 
  Construction Industry Development Act No - 33 of 2014  
 
© CIDA 2009. All Rights Reserved. Solution by Sri Lanka Telecom (Services) Ltd.