இயக்குனர் பயிற்சி மையம் ( OTC ) உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் உதவியுடன் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள இந்த பயிற்சி மையம், நிர்மாணத்துறை கருவிகள் இயக்குனர்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பயிற்சியாளர்கள் மிகவும் திறமையானவர்களாகவும் மற்றும் பயிற்சி நிலையம் 60 பயிற்சி உபகரணங்களையும் கொண்டுள்ளது. பயிற்சியாளர்களுக்கு சுதந்திரமாக இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சிப் பாசறையொன்று திறந்து விடப்பட்டுள்ளது. விடுதி வசதிகள், உணவகம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் வதிவிடப் பயிற்சியாளர்களுக்கு இருக்கின்றன. இந்த மையத்தில் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு இலங்கையிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. |